கணவரை ‘குடிக்காதே’ என்று சொன்னதால் ‘தலாக்’!

லக்னோ,

ணவரை குடிக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதால், தலாக் செய்யப்பட்டுள்ளார் இஸ்லாமிய பெண் ஒருவர். இந்த  மோசமான சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வருவப்ர் அந்த இஸ்லாமிய குடும்பம். குடும்பத்தலைவரான அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டு, அதில் கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதி குடித்து அழித்து வந்தார்.

இதன் காரணமாக அன்றாட செலவுக்கு பணமில்லாமல் அவதிப்பட்ட அந்த பெண், கணவரின் குடியை மறந்துவிட அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அந்த குடிகார கணவன் தன்னை  தலாக் கூறி விவகாரத்து செய்துவிட்டார் என்று, பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

கணவர் தலாக்  கூறியதால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது  குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள இந்த தலாக் முறைகாக எதிரான வழக்கில், உச்சநீதி மன்ற நீதிபதிகளின் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.


English Summary
'No drink' by saying wife, Husband given by Talaq