ஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டதுதான் முதியவர்களின் மரணத்திற்கு காரணம் என்று தகவல்கள் பரவின. ஆனால், அந்த முதியவர்கள் ஏற்கனவே பலவித நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.
எனவே, அந்த நோய்களால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று அநநாட்டின் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கொரோனா தடுப்பு மருந்துக்கும், அவர்களின் இறப்பிற்கும், எந்தவித தொடர்பையும் கண்டறிய முடியவில்லை என்றும், அது மிகவும் கடினமான பணி என்றும் கூறப்பட்டுள்ளது.
வடமேற்கு ஐரோப்பிய நாடான நார்வேயில், திங்கட்கிழமை மதியம் வரையிலான நிலவரப்படி, 48000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.