சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மறைந்த தலைவர்கள், உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, கேள்வி நேரம்  நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளக்கு துரைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். இது முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகரான பிச்சாண்டி அவையை நடத்தினார். இதையடுத்து தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய முன்னாள் முதல்வரும் திர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அப்பாவுமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியின்போது,   தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது, சபாநாயகராக இருந்த தனபால்மீது இதுபோல நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது.  சபாநாயகர் பதவியில் இருந்து  தனபாலை நீக்கக் கோரும் தீர்மானத்தை 10 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருந்தார். அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.  இருந்தாலும், தற்போது திமுக ஆட்சியிலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பதால், திமுகவின் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு வரும்போது, இருக்கையில் சபாநாயகர் அமராமல் வெளியே சென்றுவிட வேண்டும்.  அதிமுக ஆட்சிய்ன்போது, விவாதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,  அ.தி.மு.க.விற்கு சாதகமாக தனபால் செயல்படுவதாக  குற்றம்சாட்டினார். சபாநாயகர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை என்று சட்டசபை காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியது. மேலும், எண்ணி கணக்கெடுக்கும் முறையான ‘டிவிஷன்’ முறையில் வாக்கெடுப்பு நடத்தும்படி எதிர்க்கட்சி தி.மு.க. கோரியதால், அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, 6 பிரிவுகளாக அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களிடம் ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தி.மு.க.வின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தனபால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை தொடர்ந்து நடத்தினார்.

அதே கத்தியை தற்போது அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.  அதுபற்றி 14-ந் தேதி கூடவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த தீர்மானம்  மார்ச் 17ந்தேதி (இன்று) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று விவாததுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:   சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறியதுடன், ஆனால், அப்பாவு அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.  மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் பாரபட்சம் காட்டுகிறார் என்று கூறினார். . எதிர்க்கட்சி தலைவராக நான்  அவையில் பேசும்போது  அது நேரலை செய்யப்படுவதில்லை ன குற்றம் சாட்டினார். அதுபோல  கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை.  அதுபோல  அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பேசும்போது பல குறுக்கீடுகள் செய்வதால் முழுமையாக பேச முடியவில்லை. இதுதான் சபாநாயகரின்  ஜனநாயகமா?  ன கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை கூட்டம்,  அதிக நாட்கள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்,   ஆனால் குறைந்த நாட்கள் தான் நடந்துள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்த சட்டப்படி முடிவு எடுக்காமல், சபாநாயகர், சுமார்  2 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார்கள்.

“பேரவைத்தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்; சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது” அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர்  அவசரப்படுத்துகிறார்,

கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம். நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும்.

அதிமுக வெளிநடப்பு செய்தால் “போங்க, போங்க” என கிண்டல் செய்கிறார். என்று கூறியதுடன்,

அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை என்றார்.

ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதிமுக சார்பாக கொடுக்கப்படும் கவனஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை

அரசுக்கு  கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அதிமுக உறுப்பினர்களை தொலைக்காட்சிகளில் காண்பிக்காமல் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்கிறார்

பேரவையின் மரபையும் கண்ணியத்தையும் சபாநாயகர் காக்கவில்லை  என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினார்

அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. இந்த நிலையில்,   அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தீர்மானம் தோல்வி அடைவது உறுதி.