கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தல் விவகாரத்தில், முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சவுமியா, ரமீஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சபாநாயகர் ராமகிருஷ்ணன் மீதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாரதியஜயதான உள்பட எதிர்க்கட்சிகள் கேரள அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kerala Gold Smuggling , கேரள தங்க கடத்தல், நம்பிக்கையில்லா தீர்மானம், பினராயி விஜயன்,