நியூயார்க்: தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதால் டிவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

பிரபல சமூக ஊடக தளமான டிவிட்டர் தளத்தை உலகின் நம்பர்1 பண்காரரான எலன்மஸ்க் கைப்பற்றி உள்ளார். இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் தலைமை அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 பேரை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்த நிலையில், தொடர்ந்து, முக்கிய நபர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது சுமார் 7000 பேர் வரை பணியாற்றி வரும் டிவிட்டர் ஊழியர்களை 2ஆயிரம் ஊழியர்களை குறைக்கும் திட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய நபர்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, கிளை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது உறுதி என்பதை நிரூபிக்கும் வகையில், எலன் மஸ்க் பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  டிவிட்டர் நிறுவனம் ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்களை இழக்கிறது. இதனலால்,  ஆயிரக்கணக்கான  டிவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். வெளியேறிய அனைவருக்கும் 3 மாதம் டைம் வழங்கப்படுகிறது, இது சட்டப்பூர்வமாக தேவைப்படுவதை விட 50% அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரின் ‘புளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் 8டாலர் கட்டணம்!