சென்னை: மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய, பாஜக மாநில பொதுச்செயலாளர் நாகராஜன், ரஜினி வருகையால் பாஜகவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவ தில்லை, புயல் வருகிறது வருகிறது என்று கூறுபவர்கள் அந்த புயல் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது என கடுமையாக சாடினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, மாற்றுக் கட்சியினருக்கு தூண்டில்போட்டு, ஆசை காட்டி, தங்களது கட்சிக்கு இழுத்து வருகிறது தமிழக பாஜக தலைமை.
அதுபோல, நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து, விலகி பாஜகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலா ளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கி, பாஜகவில் சேர்ந்தவர்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ‘ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கிறார். அவர் வருகையால் பாஜகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, ஏற்படப்போவதும் இல்லை என்று கொந்தளிப்பா ககூறினார்.
பாஜக ஒரு தேசிய கட்சி. ஒரு தனிநபர் வருகையால் 18 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு தேசிய கட்சிக்கு எந்த மாற்றமும் வராது. ஆனால், அவர் வருகையை நாங்கள் வரவேற்கிறோம்’. ‘ ஒரு புயல் உருவாகிறது. அந்த புயல் எங்கே இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த புயல் கரையை கடக்கும் பொழுதுதான் புயல் யார் பக்கம் என்று தெரியும்’, அது புயலா அல்லது வெறும் காற்றா என்பது, அதுபோலத்தான் ரஜினியும்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால், அப்போது, பாஜக உடன் கூட்டணி வைப்பரா என்பது தெரியும். அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழக பாஜக தலைமையில் முதலமைச்சராக ஒருவர் வர வேண்டுமென்றால், அது மக்கள் கையில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி குறித்து கருநாகராஜன் பேசியது, பாஜக நிர்வாகிகள்மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.