சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும், மீனவர்கள் 2 நாள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனவழை பெய்யக்கூடும். நேற்று தமிழகத்தில் ரெட் அலர்ட் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அது திரும்ப பெறப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை (12ந்தேதி) புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உள்பட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வரும் 14-ந்தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்றவர், கடந்த 24 மணிநேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன், கனமழையை பொருத்தவரை கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இன்றும் நாளையும் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறினார்.
மேலும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனவழை பெய்யக்கூடும். நேற்று தமிழகத்தில் ரெட் அலர்ட் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அது திரும்ப பெறப்படுகிறது. கடலூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 3 தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றர்.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 247 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது .இயல்பாக 254 மில்லி மீட்டர் பதிவாகும் 3% சதவீதம் இயல்பை விட குறைவு. சென்னையில் பதிவான அளவு 509 மில்லி மீட்டர், இயல்பான அளவு 424 மில்லி மீட்டர் இது இயல்பை விட 20% அதிகம் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் பேசினார்.