சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கும்?
கடந்த இரண்டு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த, பெரும்பாலான கட்டிடங்களின் சீலை அகற்றியுள்ளது, மத்திய அரசு.
மதுக்கடைகள்,மால்கள் என ஒவ்வொன்றாகச் செயல்பட ஆரம்பித்துள்ளன.
சாலைகளில் எல்லா வாகனங்களும் ஓடுகின்றன.
பெருங்கூட்டம் திரளும் கோயில்களும் கூட படிப்படியாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நடுத்தர வர்க்கத்தின் ஒரே பொழுது போக்கு அம்சமான திரை அரங்குகள் திறப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்’’ கொரோனா நிலவரத்தின் பாதிப்பு குறித்து ஜூன் மாதம் முழுக்க ஆய்வு செய்து, அதன் பின் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.