டில்லி,
வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பவர்கள், இனி பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
சமீபத்தில், சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறித்துள்ள நிலையில், தற்போது பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய தேவையில்லை என்று மத்தியஅரசு கூறி உள்ளது.
வெளிநாடுகளில் அலுவல் மற்றும் படிப்பு, சுற்றுலா காரணமாக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் பாஸ்போர்ட்டு எடுக்க வேண்டியது கட்டாயம்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு சமர்பிக்கப்படும் ஆவனங்களில் பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்படுவது இதுவரை வழக்கமாக இருந்தது. இந்தநிலையில், பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக ஆதார் அல்லது பான் கார்டை பயன்படுத்தலாம் என்றும், அந்த ஆவணங்கள் பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், காப்பகத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அந்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.