டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிலுழக்க பிளாஸ்மா சிகிச்சை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அந்த சிகிச்சையால் எதிர்பார்த்த அளவுக்கு பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை, பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்த அணுக்களை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறையாகும். இந்த சிகிச்சைக்கு செலவு அதிகம் என்றாலும், அதனால்குணமடைந்து வருபவர்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி வந்தன. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பலருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிளாஸ்மா சிகிச்சையால், எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை என்றும், கொரேனா இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.
ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் பல்ராம் பார்க்கவா செய்தியாளர் சந்திப்பின்போது, ‘மிதமானது முதல் தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தை, கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை, எவ்வித பலனையும் அளிக்கவில்லை’ என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
குதிரையிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்புமருந்திற்கான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.