சண்டிகர்,
அரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளின் காரை விரட்டி சென்று,தொல்லை கொடுத்தார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஸ் குமாரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் ஜாமினில் வெளிவராத முடியாத சட்டத்தில் ஆகஸ்டு 9ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள்மீது ஐபிசி செக்சன் 365 மற்றும் 511-ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சிவில் கோர்ட்டு நீதிபதி பர்ஜிடனர் பால் சிங் (Barjidner Pal Singh) உத்தரவிட்டார். மேலும் விசாரணையை ஆகஸ்டு 29ந்தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார்.