கோவா:
கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் அதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது அந்த மாநிலம் 90 சதவீதத்திற்கு மேல் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான கோவா தொடக்கக் காலத்தில் இருந்தே அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கடந்த 3-ந்தேதி வரை 7 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று இறுதியாக கடைசி நபரையும் குணப்படுத்தியுள்ளது. இன்று அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பிறகு கோவாவில் புதிதாக கொரோனா தொற்று இல்லை. கடைசி நபருக்கும் இன்றும் நெகடிவ் வந்துள்ளது என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.