சென்னை

தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.  சென்ற வருடம் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மனுசுக் மாண்டவியாவை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அப்போது அவர்,

”தமிழகத்தில் ம பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்துத் தர வேண்டும். மதுரை மற்றும் கோவையில் புதிய எய்ம்ஸ் கல்லூரி அமைக்க வேண்டும்.”

எனக் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது.  இடில் முதல் கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசியிலும் 2 ஆம் கட்டமாக பெரம்பலுர், அரக்கோணம், ராணிப்பேட்டையிலும் மருத்துவக்கல்லுரிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளும் மத்திய அரசின் பங்கேற்புடன் அமைக்கபட உள்ளன.  இவற்றுக்கு தேவையான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுளது.