டில்லி:
திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதியாணைய தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘15வது நிதி ஆணைய தலைவராக திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக சக்திகாந்த தாஸ், அனூப் சிங், அசோக் லஹிரி, ரமேஷ் சந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.