மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடித்த ‘பேரன்பு’ படத்தை இயக்கிய ராம், புதிய தமிழ் படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க மலையாள இளம் நடிகர் நிவின் பாலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரே நேரத்தில் மூன்று மலையாள படங்களில் நடித்து முடித்துள்ள நிவின் பாலி, அண்மையில் ‘கானகம் காமினி கலகம்’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ராதேஷ் பாலகிருஷ்ணா டைரக்ட் செய்யும் இந்த படத்தை நிவின் பாலி, தனது பாலி ஜுனியர் பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி
Patrikai.com official YouTube Channel