டில்லி:
அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்க ஆதரவாக விமர்சனம் செய்த நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார் டிவிட் போட்டிருந்தார். அதில்,
நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும். இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார்.
நிதி ஆயோக் துணை தலைவர் தேர்தல் விதி மீறி, பாஜகவுக்கு ஆதரவான மனநிலையில் டிவிட் பதிவிட்டிருப்பதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமாருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.