சேலம்:

ற்கொலை செய்துகொள்ளப்போவதாக தூக்கு கயிறுடன் வீடியோ வெளியிட்ட நித்யானந்தாவின் சீடர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் – கலையரசி தம்பதியினரின் மகன் தினேஷ். எம்.பி.ஏ பட்டதாரியான இவர்  தனது கிராமத்தில் செருப்புக்கடை நடத்தி வருகிறார், நித்தியானந்தாவின் சொற்பொழிவில் ஈடுபாடு கொண்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெங்களூரு ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பல்வேறு பயிற்சிகள் பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ள நித்தியானந்தா மடத்தில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ஆறகளூர் கிராமத்துக்கு  திரும்பியுள்ளார். அவரை கடைக்கு வரும்படி அவரது தந்தை கூறிவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளனார்.

காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தினேஷ். சமையலைறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் துாக்குக் கயிறை மாட்டியவாறு தனது முகநுால் பக்கத்தில் லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இதை அவரது நண்பர்களும் நித்யானந்தாவின் சீடர்கள் பலரும் முகநுாலில் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரது முடிவை கைவிடும்படி கோரியுள்ளனர். ஆனால், அதை கேட்க மறுத்த தினேஷ்  துாக்குக் கயிற்றில் தொங்கி உயிரை விட்டுள்ளார்.

இதுகுறித்து ஏதும் அறியாத அவரது தந்தை, மதிய வேளையில் வீட்டிற்கு வந்தபோதுதான், தினேஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவ்ல அறிந்த  தலைவாசல் போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரின் மகளைக் காதலித்ததாகவும் அது நிறைவேறாததால், மனவிரக்தியில் அவர் இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விரைவில் மாற்றத்தை தேடி என பதிவிட்ட தினேஷ், மார்ச் 1ம் தேதி தான் மனதளவில் காயம்பட்டதால் விலகியிருப்பதாக முகநூலில் தகவல் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில்ததான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.