
மலையாளத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள்.
தெலுங்கில் ‘உபெனா’, இந்தியில் ஆமிர்கானுடன் ‘லால் சிங் சட்டா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மீண்டும் புதிய மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.
இந்து வி.எஸ் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கவுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிவுற்றவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.