மும்பை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் Non Executive இயக்குநர் நீதா அம்பானி வணிகம் மற்றும் பொருளாதாரம் படித்தவர. ரிலையன்ஸ் அமைப்பின் (Reliance foundation) தலைவரும் நீதா அம்பானி தான். இந்தியாவில் இருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் இந்தியப் பெண் உறுப்பினர் ஆவார் இவர்.
தற்போது இவர் தான் சமூகவலைத்தளத்தில் வைராகி வருபவர்.
இவரின் 200-க்கும் மேற்பட்ட வைரக் கற்கள் பதித்த Hermès Himalaya Birkin bag தான் தற்போதைய சோஷியல் மீடியா வைரல். இந்த ஒரு கைப் பையின் விலை 2.6 கோடி ரூபாயாம்.
இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை கரிஸ்மா கபூர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், கரிஸ்மா கபூர், உடன் நீதா அம்பானி, அந்த 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பையை மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்கிறார்.
Hermès Himalaya Birkin bag தான் கைப்பைகளின் அரசன் என உலகின் முன்னனி ஏல நிறுவனங்களில் ஒன்றான க்றிஸ்டீஸ் கூறியுள்ளது . இந்த கைப்பைகளை நைல் நதிகளில் இருக்கும் முதலைகளின் தோலில் இருந்து பதப்படுத்தி செய்யப்படுகிறதாம் .
சரி அப்படி இந்த கைப்பையில் என்ன தான் இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் தங்கம் வைரம் தான். இந்த ஒரு குட்டி கைப்பையில் 240 வைரக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கம் என ஒரு மினி நகைக் கடையையே நீதா மேடம் கையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாராம்.