நிஸ்ஸான் நிறுவனத்துக்கு 80 ரூபாய் மட்டும் கொடுத்து நாட்டை விட்டு ரஷ்யா வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
மேற்கு உலக நாடுகளின் தடையை அடுத்து ரஷ்யாவில் இருந்து மெக்-டோனல்ட்ஸ், பிரிட்டிஷ் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வெளியேறின.
ரஷ்யா-வை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படும் தவிர மீண்டும் ரஷ்யாவில் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையையும் மீறி வெளியேறிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை ரஷ்ய நிறுவனங்களுக்கு விற்பனை செய்தன.
அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் மொத்த பங்கையும் ரஷ்யாவின் அரசுத் துறை நிறுவனமான NAMI-யிடம் 1 யூரோ-வுக்கு விற்பனை செய்தது.
ரஷ்யாவை விட்டு நிசான் நிறுவனம் வெளியேறியபோதும் அடுத்த ஆறு ஆண்டுகளில் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளை திரும்பபெற ஒப்பந்தத்தில் வகைசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், 1 யூரோவுக்கு ரஷ்யா-விடம் நிசான் நிறுவனம் விலைபோனதால் அதற்கு சுமார் 5700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.