மும்பை:

காராஷ்டிராவில் இன்று கரையை கடக்கும் நிசார்கா புயல் காரணமாக மாநிலத்தில் விமானம், ரயில் உள்பட போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரபிக்கடலில் உருவான  நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே  இன்று பிற்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வா் மற்றும் டாமன் இடையே நிசா்கா புயல் கரையை கடக்கும் என்றும் அப்போது,  மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும்,  மும்பை, தானே, பால்கர், ராய்காட்ட, ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களின்  புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல்  காரணமாக இன்று காலை முதலே பலத்த மழையுடன் காற்றும்  வீசி வருகிறது. இதையொட்டி,  குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள்  தயாராக உள்ளன.

புயல் பாதிப்புகளை கண்காணிக்க மாநில தலைமை செயலத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக, மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் மும்பைக்கு வரும் விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவை புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து புறப்படும் ஐந்து ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மும்பைக்கு வரவிருந்து 2 ரயில்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஒரு ரயில் மட்டும் திருப்பிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வாகன சேவைகளும் முக்கப்பட்டு உள்ளது.ள் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றால் சிக்கி சின்னாப்பின்னமாகி உள்ள மகாராஷ்டிராவை, நிசார்கா புயல் என்ன பாடுபடுத்தப்போகிறதோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.