நியூயார்க்:

லகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை உள்பட பெரும்பாலான துறைகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து அல்லல் படுகின்றனர்.

இந்தியப்  பொருளாதாரம் சரிவடைந்து வருவது குறித்து பிரதமர் மோடியோ, நிதி அமைச்சரோ கண்டுகொள்ளா மல் இருந்து வருகின்றனர்.  இது தொழிலதிபர்கள் மற்றும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி, பொருளாதாரம் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத்  தெரியாது ஏன ஓப்பனாக பேசியிருந்தார். அதுபோல நிதிஅமைச்சர் நிர்மலாவின் கணவரும், பொருளாதாரம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில்,  அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொது விவகாரங்கள் கல்லூரியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, இந்திய பொருளாதாரம் குறித்து பேசியவர், “5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு இந்தியா என்ற நிலை வருகிறபோது, இன்றைய டாலர் மதிப்பை வைத்து பார்த்தால், உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும். இந்த நிலையை அடைவதற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 5 ஆண்டுகளில் காணப்பட்ட 7½ சதவீதம் என்ற வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் வேகமாக வளர வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  உலகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் நாங்களும் ஒன்றாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.