டெல்லி
திமுக எம் பி திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசிய போது இந்த மசோதாவை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டு இடையில் அவர், பா.ஜனதாவின் சுலோகமான “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்பதை சொல்ல முடியாததைப் போல அருகில் இருந்த உறுப்பினரிடம் கேட்டார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“திருச்சி சிவா இந்தி பாடலை நன்றாக பாடுவார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர் ‘சப்கா சாத் சப்கா’… என வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறார். இந்தி தெரியாததைப் போல காட்டுகிறார்”
என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
திருச்சி சிவா,
“நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்து பாடுவேன். ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு தெரியாது. யாராவது சொன்னால்தான் புரியும்”
என்று பதில் அளித்தது வக்பு மசோதா மீதான சூடான விவாதத்திஒடஒயே கலகலப்பை ஏற்படுத்தியது.