டில்லி
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட மாட்டாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஜிம் மாட்டிஸ் மூன்று நாள் பயனமாக இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பில் தீவிரவாத ஒழிப்பு, சீன ஊடுருவல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின் முடிவில் நிர்மலா சீதாராமன், “ஆப்கானிஸ்தானுடைய முன்னேற்றத்துக்கும், மருத்துவ வசதிகளுக்கும் தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும். ஆனால் இந்தியப் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப் பட மாட்டாது” என தெரிவித்தார்.
ஜிம் மாட்டிஸ், “தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா தயாராக உள்ளது. இரு நாடுகளும் சேர்ந்து தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க பாடுபடும்” என கூறி உள்ளார்.