டில்லி

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமார் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியில் மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு நாளை மறுநாள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.

திஹார் ஜெயிலில் இதற்கான ஒத்திகையெல்லாம் முடிந்துள்ள நிலையில்-

தூக்குத் தண்டனை கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குப் போட்டுள்ளார்.

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு செய்துள்ள புனிதா, ‘ என் கணவரைத் தூக்கில் போடப் போகிறார்கள். நான் விதவையாக, எனது எஞ்சிய நாட்களைக் கழிக்க விரும்பவில்லை.  எனவே விவாகரத்து வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘’இந்து திருமண சட்டத்தின் படி புனிதா விவாகரத்து கேட்க உரிமை உள்ளது’’ என்கிறார், அவரது வழக்கறிஞர் முகேஷ் குமார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

தூக்கு தண்டனை நிறுத்தி வைக்க இந்த  வழக்கு, ஒரு சாக்குப் போக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

–  ஏழுமலை வெங்கடேசன்