டில்லி:

13ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. அவரது சொகுசு கார்களை அமலாக்கத்துறை விற்பனை செய்து வருகிறது.

இதில், நிரவ் மோடியின் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தை பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றனர்.

தற்போது, நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து நிரவ் மோடியின்  அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி  விற்பனை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிரவ் மோடியின் 12 சொகுசு கார்களையும் அமலாக்கத்துறை முன்னரே பறிமுதல் செய்தது. தற்போது அந்த கார்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏலம் விட்டு பணம் திரட்டி வருகிறது.

சமீபத்தில் அவரது 3 கார்கள் ஏலம் விடப்பட்டன. அந்த கார்கள் முறையே ரூ.53 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.10 லட்சம் என்ற ரீதியில் ஏலம் சென்றன. அதே சமயம் ஸ்கோடா காரை ரூ.7 லட்சத்துக்கு கேட்டதால் அதன் ஏல கேட்பு விலை குறைவாக இருப்பதாக கூறி அந்த கார் விற்கப்படவில்லை.

இதற்கிடையில் கடந்த செவ்வாய்கிழமை நிரவ் மோடியின் அதி நவீன காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்பட்டது. அந்த காரை ஒருவர் ரூ 1. 70 கோடிக்கு ஒருவர் ஏலம்  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல நிரவ்மோடியின் போர்சி ரக காரை (Porsche Panamera) 60 லட்சம் ரூபாய்க்கு மற்றொருவர் ஏலம் எடுத்துள்ளாராம்.

இதோடு மற்ற கார்களையும் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. இதோடு நிரவ்மோடியின் மற்ற சொத்துக்களையும் அடுத்தடுத்து ஏலம் விட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம்.