மும்பை:
பல கோடி வங்கி மோசடி செய்த நீரவ் மோடியின் அபூர்வ ஆயில் பெயிண்டிங் ஓவியங்கள் ரூ.50 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்துவிட்டு தப்பியோடிய நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது, அரிதான விலை மதிப்பற்ற ஆயில் பெயிண்டிங்குகளை கைப்பற்றினர்.
இந்த பெயிண்டிங்குகள் ரூ.50 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக கைப்பற்றப்பட்ட தங்கம், சொத்துகளைத்தான் ஏலம் விடுவார்கள். இவ்வளவு பெரிய தொகைக்கு அரிதான ஆயில் பெயிண்டிங்குகளை ஏலம் விடுவது இதுவே முதல்முறை என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
19&ம் நூற்றாண்டு ரவிவர்மாவின் ஓவியம்,நவீன ஓவியர் விஎஸ்.கெய்ட்டோன்டேவின் ஓவியம் ஆகியவை இதில் அடங்கும்.