டில்லி

ஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடியின் இரு பெல்ஜிய நாட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.

பிரபல நகை வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.    சிபிஐ குற்றம் சாட்டுவதற்கு சில நாட்கள் முன்பு நிரவ் மோடி தனது கூட்டாளியான மெகுல் சோக்சியுடனும் தனது குடும்பத்தினருடனும் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.    அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு நிரவ் மோடியின் இந்தய சொத்துக்களைக் கைப்பற்றி உள்ளது.    மேலும் நிரவ் மோடியின் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றது.   நிரவ் மோடிக்கு வெளிநாடுகளில் பல வரத்தக நிறுவனங்கள் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அவ்வாறு பெல்ஜியம் நாட்டில் உள்ள நிரவ் மோடியின் வர்த்தக நிறுவனங்களுக்கு  சொந்தமான நிறுவனத்துக்கு இரு வங்கி  கணக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.   இந்தியாவுக்கும் பெல்ஜியம் நாட்டுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை பயன்படுத்தி அந்த கணக்குகளை முடக்குமாறு பெல்ஜிய அரசுக்கு இந்திய அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது.

அதை அடுத்து பெல்ஜிய அரசு நிரவ் மோடியின் இரு வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளது.   இந்த தகவலை தெரிவித்த அமலாக்கப் பிரிவு இயக்குனரக அதிகாரி இது போல் இன்னும் ஏழு நாடுகளுக்கு வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.    அந்த நாடுகள் இந்திய அமலாக்கப் பிரிவின் இந்த கோரிக்கைக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.