டில்லி:
‘‘தங்கம் இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசு நீக்கியதன் மூலம் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் 200 சதவீத லாபம் அடைந்துள்ளனர்’’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமல்படுத்த 80:20 என்ற தங்கம் இறக்குமதி திட்டத்தின் நிப ந்தனைகளை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. 2014ம் ஆண்டு 28ம் தேதி திடீரென விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் செய்யப்பட்டதால் நஷ்டத்தில் இயங்கி வந்த நிரவ் மோடி, மெகுல் சோக்சி நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்ட தொடங்கின.
2013-14ம் ஆண்டில் இவர்களின் நிறுவனங்கள் ரூ.22.65 கோடி நஷ்டத்தை சந்தித்தன. நிபந்தனைகள் தளர்த்திய பின்னர் 2014-15ம் ஆண்டில் இந்நிறுவனங்களின் லாபம் ரூ. 18.86 கோடியாக உயர்ந்தது. இது 200 சதவீதம் அதிகமாகும். வைர வியாபாரிகள் பயன்பெறுவதற்காக தான் பாஜக அரசு இந்த நிபந்தனைகளை தளர்த்தியது’’ என்றார்.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தங்கம் இறக்குமதியில் 80:20 என்ற திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் 4 வங்கிகள், 2 அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்படும். இதில் 80 சதவீதம் உள்நாட்டு நுகர்வோருக்கும், 20 சதவீதம் கண்டிப்பாக மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]