டெல்லி:
மார்ச் 22ந்தேதிக்கு முன்பு டெல்லிக்கு பயணமான 9 ரயில்வே போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் மார்ச் 22ந்தேதி ஒருநாள் ஜனதா ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு மக்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  மார்ச் 22 ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர்  டெல்லிக்குச் சென்ற ஒன்பது ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]