ருமேனியா:
ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையிலிருந்த மற்ற நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்று கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]