சென்னை,
நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு, மூகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கமலின் நிலவேம்பு குறித்த டுவிட்டுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்மீதான குற்றச்சாட்டில் மூகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யலாம் என ஐகோர்ட்டு கூறி உள்ளது.
நிலவேம்பு கொடுக்க வேண்டாம் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர் மன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கமல்மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தேவராஜன் கடந்த 19ந்தேதி என்பவர் புகார் அளித்தார்.
அதில், தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்க விளைவுக ளும் ஏற்படவில்லை என்றும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்..
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மூகாந்திரம் இருந்தால் கமல்மீது வழக்க பதிலாயம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி உள்ளது.
இதன் காரணமாக கமல்மீது வழக்கு பாய்வது உறுதியானது.
கமலின் கருத்து குறித்து, தமிழக சித்தமருத்துவர்கள் சங்கத்தினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். தமிழக அரசும் நிலவேம்பு குறித்து யாரும் தவறான தகவல்களை பதிவிடக்கூடாது என்றும், தவறான தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.