ஜிவி பிரகாஷுடன் டார்லிங் படத்தில் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. பிறகு பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களூடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச் சைக்குபிறகு தற்போது குணம் அடைந்திருக்கிறார்.
கொரோனா தொற்றில் பாத்தித்து மீண்ட அனுபவம் பற்றி நிக்கி கல்ராணி கூறினார். அவர் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக மக்களி டையே பயமும் பதற்றமும் ஏற்பட் டுள்ளது. எனவே, எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். எனக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் லேசான அறிகுறிகள் இருந்தன. தலைவலி, இவை அனைத்தும் சுமார் 5-6 நாட்கள் நீடித்தன. சுவை மற்றும் வாசனை யின் உணர்வை நான் முற்றிலுமாக இழந்துவிட்டேன். உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை மேற் கொண்டேன். இது சுமார் 12 நாட்கள் நீடித் தது. பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. நான் எப்படி வைர ஸால் பாதிக்கப்பட் டேன் என்று எனக்குத் தெரியவில்லை.


எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் வந்தவுடன், பரிசோதித்துக்கொண்டேன். அதில் பாசிடிவ் என தெரிந்த்தௌம் சிகிச்சைக்குரெடியாகிவிட்டேன். கொரோனா பரிசோதனைக்கு பலர் பயப்படுகிறார்கள். 14 நாட்கள் தனிமைப் படுத்திவிடுவார்கள் என்ற பயமாக இருக்க லாம். யாருக்கும் பயம் தேவை இல்லை.
சிகிச்சை சிலர் எண்ணுவதுபோல் கொரோனா சிகிச்சை மோசமானதாக இல்லை. மொபைல் போன், டிவி எல்லம் உங்கள் கையிலேயே இருக்கிறது. அன்புக் குரியவர்களுடன் தினமும் பேசலாம் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், தயவு செய்து பரிசொதனை செய்துக்கொண்டு தொற்று ஒருந்தால சிகிச்சை தொட்ங்கி விடுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இளைஞர் கள் உடல் தகுதியாக உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. ஆனால் வயதானவர்கள் தொற்று அறிகுறி இருந்தும் அமைதியாக இருப்பது, பரிசோதனை செய்துக்கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது. அவர்கள் உடனடியாக சிகிச்சைசெய்து கொள்ள வேண்டும். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணராமல் வீட்டில் அமர்ந்துக்கொண்டு மற்றவர்களுக்கு அதைப் பரப்பக்கூடாது.
மருந்துகளை சுயமாக பரிந்துரைக்கா தீர்கள். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது. கொரோனா தொற் றால் நான் பாதிக்கப்பட்டபோது உங்கள் அன்பையும், நல்லெண்ண வாழ்த்துக் களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்தார்.