டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவுக்கு டிரம்ப் பாராட்டு

Must read

வாஷிங்டன்:
டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. தங்கள் நிறுவன விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் தெரிவித்தது.

இதையடுத்து தங்களது நாட்டில் டுவிட்டர் நிறுவனம் தடை செய்யப்படுவதாக நைஜீரிய அரசு அறிவித்தது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, ‘சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக, டிரம்பின் டுவிட்டர் கணக்கை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article