புஜா

றைந்த நைஜீரிய அதிபர் சனி அபாசா சுவிட்சர்லாந்தில் வைத்திருந்த பணத்தை நைஜீரிய அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டின் அதிபராக இருந்த சனி அபாசா அந்நாட்டில் ஊழல் செய்து அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ளார்.   கடந்த 1993 முடல் 1998 வரை நடந்த இந்த ஊழலில் பல லட்சக்கணக்கான பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் அமெரிக்க டாலர்கலாக முதலீடு செய்யப்பட்டது.     இதை ஒட்டி சர்வதேச நீதிமன்றத்தில் நைஜீரிய அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு அபாசாவின் பணம் முடக்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சர்வதேச நீதிமன்றம்  அபாசா முதலீடு செய்த பணத்தை நைஜீரிய அரசுக்கு திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  தற்போது சனி அபாசா உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   சுவிட்சர்லாந்து அரசு தங்களிடம் இருந்த நைஜீரிய அதிபரின் பணத்தை நைஜீரிய அரசு வங்கியான நைஜீரிய மத்திய வங்கிக்கு வட்டியுடன் அளித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நைஜீரியாவின் நிதி அமைச்சர் கேமி அடியோசன் சுவிட்சர்லாந்து அரசிடம் இருந்து 32,251 கோடி அமெரிக்க டாலர்கள் நைஜீரிய மத்திய வங்கிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   இந்த தகவலை உலக வங்கியும் ஆமோதித்துள்ளது.   மேலும் நைஜீரிய அரசு இந்த தொகையை சமூக நலத் திட்டங்களுக்கு உபயோகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]