சென்னை: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ராயப்பேட்டை, வண்ணார்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழு கிணறு, நீலாங்கரை தாம்பரம், வண்டலூர் மற்றும் புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
Patrikai.com official YouTube Channel