திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமுக்கு இன்று காலை வந்த தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை வந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த அகதிகள் முகாமில் இலங்கை, பல்கேரியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 143 பேர் தங்கி உள்ளனர். அவரிகளிடம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை நடைபெற்று வருகிறது. முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அகதிகள் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தார். விசாரணையின் போக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமையிடம் விவரம் கேட்டு அறிகிறார்.