க்னோ

சுமைத்தீர்ப்பாயம் உ பி யின் சில பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயங்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பாணையம் தடை விதித்திருந்தது தெரிந்ததே.  அதை நீக்கக் கோரி மனு செய்யப்பட்டிருந்தது.  அந்த மனுவை அளித்த முசாஃபர்நகர் சிறு வாகனங்கள் சொசட்டி அந்தப் பகுதியில் அனைத்து வாகனங்களும் டீசலில் இயக்கப்படுவதாகவும், அங்கு கிடைக்கும் ஒரே எரிபொருள் டீசல் மட்டும் தான் எனவும் குறிப்பிட்டிருந்தது.

அந்த மனுவை பரிசீலித்த பின் தீர்ப்பாணையம் உ. பி மாநிலத்தில் முசாஃபர்நகர் மற்றும் சில மாவட்டங்களில் இந்த வாகனங்களை சில மாறுதல்கள் செய்த பின் இயங்கலாம் என அனுமதித்துள்ளது.   இந்த வாகனங்களின் பழைய எஞ்சின்களுக்கு பதிலாக புதிய சுற்றுச்சூழலை பாதிக்காத எஞ்சின்கள் பொருத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தலைநகர எல்லைக்குள் இந்த வாகனங்கள் நுழைய தடை உள்ளது.