டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

 

தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்து உள்ளதாலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் மிதமானது என்றும் மிதமான நிலைக்கு மேல் இருந்தாலும் அந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், அதேநேரத்தில் 2 மணி நேரங்களுக்கு மேலாக அனுமதி இருக்காது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு கூறி உள்ளது.

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு நேரங்களில் பசுமை பட்டாசுகளை இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை காற்றின் தரம் சீராக இருக்கும் இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த அமர்வு கூறியுள்ளது.

அதேபோன்று தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், மீறினால் இழப்பீடு பெறுமாறும் ஆணையிட்டு உள்ளது.