மதசம்பந்தமான பல்வேறு என்ஜிஓ-க்கள் கல்வி, ஆன்மீகம், சமூக சேவை என வெளிநாடுகளில் நிதி பெற்று இந்தியாவில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.
அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது .
வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடித்தை சமர்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடிய நிறுவனங்கள், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.