சென்னை

டுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்போத் மக்களுக்கு மிகவும் பயன் அளித்து வருகிறது.   இந்த மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் சென்னை நகர் முழுவதுமே மெட்ரோ ரயில் சேவை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  கேளம்பாக்கம் மற்றும் சென்னை மிமான நிலையம் இடையில் மெட்ரோ ரயில் சேவைகளை அளிக்க உள்ளது.  இதற்கான பணிகள் வரும் 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி 2026 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த மெட்ரோ ரயில் பாதை 15.3 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

இதில் மொத்தம்12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.4,080 கோடி ஆகும்.   இந்த ரயில் ஜி எஸ் டி சாலையுடன்  இணைந்துச் செல்ல உள்ளதால் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட உள்ளன.  இந்த தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.

இந்த பாதையில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு விக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை,  பெருங்களத்தூர்,  வண்டலூர், அறிஞர் அண்ணா மிருகக் காட்சி சாலை, மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.