சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நுழைந்த நடிகரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை சமூக வலை தளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அரசியல்வாதகிள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த கடிதம் மயிலாப்பூர் எம்எல்ஏ.வாக அவர் இருந்தபோது அரசு சார்பில் அச்சடித்து கொடுத்த லெட்டர் பேடாகும். அரசாங்க முத்திரை கொண்ட அந்த லெட்டர் பேடில் எஸ்வி சேக்ர மன்னிப்பு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் எம்எல்ஏ என்ற வார்த்தையின் முன்பு ‘முன்னாள்’ என்று மட்டும் பேனாவால் எழுதியுள்ளார். மற்றபடி தொலைபேசி எண், இ.மெயில் முகவரி ஆகியவை எம்எல்ஏ.வுக்கு உரியவையே இடம்பெற்றுள்ளது.

தற்போது மயிலாப்பூர் எம்எல்ஏ.வாக நடராஜன் உள்ளார். அந்த தொலைபேசி எண், இமெயில் முவகரியை அவர் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங் முத்திரையுடன் கூடிய எம்எல்ஏ லெட்டர் பேடில் மன்னிப்பு கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளிக்க சிலர் முடிவு செய்துள்ளனர்.