சென்னை
அடுத்த மாதம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்க உள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிரந்தர வீடு கட்டித் தரும் திட்ட்த்தை உருவாக்கினர், இதையொட்டி கட்ந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டம் வசதியற்றோருக்கு கூரையுடன் கூடிய வீடுகளைக் கட்டித் தரும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது.
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 25 ஆம் தேதிக்குள் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.