டெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் மக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தி பதிவு போட்டுள்ளார். அதில்,
என் அன்பான நாட்டு மக்களே! நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை(ஏப்.26) நடைபெறுகிறது.
அடுத்த அரசாங்கம் ‘சில கோடீஸ்வரர்களின் ஆட்சியா?’ அல்லது ‘140 கோடி மக்களின் ஆட்சியா?’ என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும்.
எனவே, இன்று வீடுகளை விட்டு வெளியேறி, ‘அரசியலமைப்புச் சட்டத்தின் சிப்பாயாக’ மாறி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.