மவுன்ட்மாங்கானு: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து.
கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, 50 ஓவர்கள் கொண்ட 3 ஒருநாள் தொடர் தொடங்கியது. ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்து 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந் நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது. தொடர்ந்து இந்தியா பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர். கேஎல் ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார். 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து உள்ளது.
இதையடுத்து, 297 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக குப்தில், நிக்கோலஸ் வந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 106 ரன்கள் சேர்த்தனர். குப்தில் 66 ரன்களில் வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி வீரர்கள் நம்பிக்கை கொண்டனர்.
நிக்கோலஸ் 80 ரன்களில் வெளியேறினார். ஆனால் கிராண்ட ஹோம் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. 28 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
முடிவில், 5 விக். இழப்புக்கு 300 ரன்களை எடுத்து நியூசி. அபாரமாக வென்று, தொடரையும் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.