வெலிங்டன்

டுத்த வருடம் ஈராக்கில் உள்ள தங்கள் படைகள் வெளியேறும் என நியூஜிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

ஈராக் நாட்டில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்து வன்முறை நிகழ்வுகள் நிகழ்த்தி வந்தனர். இதை ஒட்டி அமெரிகாவுடன் இணைந்து ஆஸ்திரேலியா ஈராக் நாட்டுக்கு உதவ தனது படைகளை அனுப்பி வைத்தது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு உதவ கடந்த 2015 ஆம் ஆண்டு நியுஜிலாந்து தனது படைகளை அனுப்பி வைத்தது.

நியுஜிலாந்து படைகள் ஈராக் படையினருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க பயிற்சிகள் அளித்து வந்தன. கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து 44000 வீரர்களுக்கு நியூஜிலாந்து பயிற்சி அளித்துள்ளது. தற்போது ஐஎஸ் பிடியில் இருந்து ஈராக் விடுவிக்கப்பட்டுள்ளது. இனி ஈராக் படைகள் தீவிரவாதிகளை ஒடுக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஒட்டி நியுஜிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “தற்போது ஈராக் நாட்டில் 95 நியுஜிலாந்து படைகள் உள்ளன. இவற்றை படிப்படியாக திரும்ப பெற உத்தேசித்துள்ளோம். அடுத்த வருடம் நியுஜிலாந்து படைகள் முழுவதுமாக ஈராக்கை விட்டு வெளியேறும்.

இதில் முதல் கட்டமாக ஜூலை மாதமும் இரண்டாம் கட்டமாக 2020 ஆம் வருடம் ஜனவரி மாதமும், இறுதியாக 2020 ஆம் வருடம் ஜூன் மாதமுமாக அனைத்து படைகளும் வெளியேறுவர்” என தெரிவித்துள்ளார்.