டில்லி:

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். இதன் காரணமாக அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்துசெல்ல அனுமதி வழங்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடியாக, பாகிஸ்தான் பாலகோட் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தி ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான்  வான்வெளியில் அயல்நாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தடை விதித்தது. அந்த தடை தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் வரும் 14 15ந்தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். அங்கு  பாகிஸ்தான் வான்வெளி வழியாக கிர்கிஸ்தான் செல்ல 4 மணி நேரம் ஆகும். அதுவே மாற்றுப் பாதையில் சென்றால் 8 மணிநேரம் ஆகும். எனவே பிரதமரது விமானம் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  பிஷ்செக் நகருக்கு செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது அதற்கு பாகிஸ்தான் அரசும் அனுமதி அளித்திருந்தது.  இந்த நிலையில், தற்போது மோடி கிர்கிஸ்தான் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.