லக்னோ
வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் மாட்டிய நீதிபதி தற்போர்து அலகாபாத் உயரீந்திமன்ர நீதிபதியாக பதவி ஏற்றுள்ளாஃப்ர்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்த யஷ்வந்த் வர்மா டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மாதம் ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்ந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைந்தபோது, நீதிபதியின் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பூதாகாரமான நிலையில் இது குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்றட்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்ற போதும் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பாக அக்குழு அறிக்கை சமர்பிக்கும்வரை யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும் அவருக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.