புதுடெல்லி: ரிடர்ன்ஸ் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வரிசெலுத்துவோருக்கு தன்னிச்சையாகவே வருமான வரித்துறை PAN எண் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PAN எண் மற்றும் ஆதார் ஆகிய இரண்டையும் இணைக்கும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இது நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஏற்பாட்டின்படி, PAN அட்டை இல்லாதவர்கள், தங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ரிடர்ன்ஸ் தாக்கல் செய்யும்போது அவர்கள் PAN எண்ணுக்காக தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேவை எழாது. மேலும், இதன்பொருட்டு அவர்கள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய தேவையும் இராது.
இந்தப் புதிய விதிமுறை செப்டம்பர் 1 முதலே அமலுக்கு வருகிறது. UIDAI(unique identification authority of india) அமைப்பிடமிருந்து சம்பந்தப்பட்ட நபரின் வசிப்பிட விபரங்களைப் பெற்றுக்கொண்டு, அந்த நபருக்கான PAN எண்ணை வருமான வரித்துறை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வரித்துறைக்கான கொள்கையை, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.