டில்லி

ந்தியா சுதந்திரம் அடைந்த போது அப்போதைய பிரதமர் நேறுவிடம் தமிழக செங்கோல் அளித்ததாக கூறப்படுவது குரித்த ஒரு செய்தி கட்டுரை இதோ

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து அதைப் பெற்று அளித்ததாக ஒரு  தகவல் சொல்லப்பட்டு வருகிறது.

வரும் மே 28 ஆம் தேதி அன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படவுள்ளது. இங்கு செங்கோல் ஒன்று பிரதானமான இடத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த செங்கோலின் பின்னணி குறித்து, செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

“இந்தியா சுதந்திரமடையும் நாள் நெருங்கியபோது, மவுன்ட்பேட்டன் பிரபு பண்டித ஜவஹர்லால் நேருவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு ஆட்சியைக் கை மாற்றியளிப்பதைக் குறிக்க எந்த நிகழ்வை மேற்கொள்ளலாம்

இதையடுத்து நேரு, ராஜாஜியின் உதவியை நாடினார். ராஜாஜி, சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியை உயர் குருமார்களின் ஆசியுடன் ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு மாற்றிய வழிமுறையை அடையாளம் கண்டார். ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டதற்கு செங்கோல் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.

 

ராஜாஜி தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். ஆதீனகர்த்தர் உடனடியாக ஐந்தடி நீளத்தில் செங்கோல் தயாரிக்க உத்தரவிட்டார். சென்னையின் உம்மிடி பங்காரு செட்டி ஜுவல்லர்ஸ் செங்கோலை வடிவமைத்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று மூன்று பேர் செங்கோலை எடுத்துக்கொண்டு பிரத்யேகமான விமானத்தில் வந்தார்கள். ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஆகியோர்தான் அந்த மூவர். மடாதிபதி மவுன்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து பின்பு அவரே வாங்கிக்கொண்டார்.

பிறகு நேருவிடம் கொடுப்பதற்காக அந்தச் செங்கோல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயர் குருமார்களால் குறிப்பிடப்பட்ட தேவாரப் பாடல் பாடப்பட்டது. நேரு இதைப் பெற்றுக் கொண்டார்,”

என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை மடம் ஒரு செங்கோலை நேருவுக்கு வழங்கியது. இதுதொடர்பான பத்திரிகைச் செய்தி ஆதாரங்களும் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. இந்தப் புகைப்படத்தில் நெற்றியில் திருநீற்றுடன் செங்கோலைப் பிடித்தபடி நேரு நிற்கிறார்

இந்திய நிர்வாகத்தின் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு கைமாறுவதன் அடையாளமாக செங்கோல் மவுன்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு, அது நேருவிடம் கொடுக்கப்பட்டதா என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. இது போன்றதோர் ஆலோசனையை ராஜாஜி வழங்கினார் என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் கிடையாது.

இந்த செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ் பின்வருமாறு விவரிக்கிறது:

“கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.  தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்திருந்தார்கள். இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவான தேசிகர் கருதினார்.

அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர் ஒரு பெரிய வெள்ளித்தட்டைத் தாங்கி வந்தார். அந்த வெள்ளித்தட்டில் ஜரிகையுடன்கூடிய பீதாம்பரம் இருந்தது.

நேருவின் வீட்டை இறுதியில் அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் தனது நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

பிறகு அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு இருவர் விசிறினார்கள்.  ஒரு சன்னியாசியிடம் ஐந்தடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார்.

நேருவின் நேற்றியில் விபூதி பூசப்பட்டது. நேருவுக்கு பீதாம்பரத்தைப் போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள். அன்று காலையில் நடராஜருக்குப் படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டுவரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது,”

என விவரிக்கிறது. .